சிங்கப்பூரில் வூஹான் வைரஸ் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபர்…!

Fifth confirmed case of Wuhan virus
Singapore confirms 5th case; patient from Wuhan stayed at her family's home in Ceylon Road (PHOTO: LIANHE ZAOBAO)

Fifth confirmed case of Wuhan virus in Singapore : வூஹான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபரை சிங்கப்பூர் உறுதி செய்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) திங்கள்கிழமை இரவு (ஜனவரி 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீன நாட்டின் வூஹானைச் சேர்ந்த 56 வயதான பெண்ணுக்கு இந்த தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது, கடந்த ஜனவரி 18ஆம் தேதி, அவர் தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : மர்மமான வூஹான் வைரஸ்; முதல் நபரை உறுதிப்படுத்திய சிங்கப்பூர்..!

“அவர் தற்போது தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார், மேலும் அவரது நிலை சீராக உள்ளது” என்று MOH கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் இரண்டு பேருக்கு வூஹான் வைரஸ்…!

தொற்று இருக்கலாம் என அவர் ஒரு சந்தேக நபராக வகைப்படுத்தப்பட்டு உடனடியாக என்சிஐடியில் தனிமைப்படுத்தப்பட்டார். “அடுத்தடுத்த சோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது (ஜனவரி 27) உறுதிசெய்யப்பட்டது,” என்று MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ் பாதிக்கப்பட்ட நான்காவது நபரை உறுதிசெய்த சிங்கப்பூர்..!

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, தனது குடும்பத்தினருடன் அவர் சிலோன் சாலையில் உள்ள அவர்களது வீட்டில் தங்கியிருந்தார்.

நேற்று திங்கள்கிழமை நண்பகல் வரை, சந்தேகத்திற்குரிய 62 நபர்கள் வுஹான் கொரோனா வைரஸ் சோதனையில் எதிர்மறை முடிவுகளை பெற்றுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

மேலும், மீதமுள்ள 57 பேரின் சோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளன என்று சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.