மர்மமான வூஹான் வைரஸ்; முதல் நபரை உறுதிப்படுத்திய சிங்கப்பூர்..!

Wuhan virus : சிங்கப்பூரில் 66 வயதான ஆடவர் ஒருவர், சமீபத்தில் பீதியை கிளப்பிவரும் மர்மமான வூஹானின் கொரோனா கிருமி தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வூஹான் குடியிருப்பாளரான 66 வயதான அந்த நபர் கடந்த திங்கள்கிழமை (ஜன. 20) 9 பயண நண்பர்களுடன் சிங்கப்பூர் வந்துள்ளார், மேலும் அவர் ஷாங்க்ரி-லாவின் ராசா சென்டோசா ரிசார்ட்டில் (Shangri-La’s Rasa Sentosa resort) தங்கியிருந்ததாக, சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை நேற்று (ஜனவரி 23) இதனை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தொடர் வெற்றிகளை கொடுத்த Noise and Grains-ன் புதிய பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி..!

மேலும், 53 வயதான சீன நாட்டை சேர்ந்த ஒரு பெண், இவர் அந்த குழுவுடன் பயணம் செய்யவில்லை, இவருக்கும் கொரோனா கிருமி தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது, அவை உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கூடுதலாக, அந்த ஆடவரின் மகனுக்கும் (வயது 37) நோய் தொற்று இருக்கலாம், என சந்தேகத்திற்கிடமான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், அதே நேரத்தில் அவருடன் பயணித்து வந்த மற்ற எட்டு பேரும் சிங்கப்பூரை விட்டு வெளியேறினர்.

இருப்பினும், “இந்த வைரஸ் இங்கு யாருக்கும் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளின் வெப்பநிலையை பரிசோதிக்கும் வகையில் அதனை விரிவுபடுத்தி நடவடிக்கை மேற்கொண்ட பின்னர், சிங்கப்பூரில் சந்தேகிக்கப்படும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மொத்தத்தில், 1 முதல் 78 வயது வரை உள்ள 28 சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருவரை அவமதித்ததாக இந்தியர் மீது குற்றச்சாட்டு..!

மேலும், “அதன் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று அமைச்சகத்தின் தொற்று நோய்களின் தடுப்புப் பிரிவு (communicable diseases) இயக்குநர் இணை பேராசிரியர் வெர்னான் லீ கூறியுள்ளார்.

இங்குள்ள முதலில் பாதிக்கப்பட்ட நபரை பொறுத்தவரை, அவர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால், பொது மக்களுக்கு இனி எந்த ஆபத்து இல்லை என்று அவர் வலியுறுத்தி கூறினார்.

மேலும், “பொது மக்கள் பீதியடையவோ அல்லது சிறப்பு நடவடிக்கைகளை செய்யவோ தேவையில்லை” என்றும் கூறியுள்ளார்.

Source: Straits Times