கட்டுமான வேலைகளில் அட்ஜஸ்ட்மெண்ட்; லஞ்சம் வாங்கியவருக்கு சிறை, அபராதம்.!

lightning strike 3 construction workers hospital
Pic: Getty Images

சிங்கப்பூரைச் சேர்ந்த 60 வயதான சுவா காய் குவாட் என்ற பொறியாளர் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் இரண்டு முறை லட்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், கட்டுமான வேலைகளின் தாமதத்தை தவிர்க்க ஒப்பந்தக்காரருக்கு உதவும் வகையில் இரண்டு முறை மொத்தமாக S$4,500 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.

லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக அந்த பொறியாளருக்கு, 22 வாரங்கள் சிறைத் தண்டனையும் மற்றும் S$4,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சிபிஜி கன்சல்டன்ட் நிறுவனத்தில் பொறியாளராக இருந்த சுவா காய் குவாட், தாமன் ஜூரோங்கில் உள்ள ஓர் முதியோர் இல்ல கட்டுமானத்தளத்தில் இணைக்கப்பட்டிருந்தார் என கூறப்படுகிறது.

ஸ்ரீ சிவன் கோயில் பிப்.14 வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு!