ஸ்ரீ சிவன் கோயில் பிப்.14 வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு!

Photo: Google Maps

சிங்கப்பூரில் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், அவர்களில் 99% பேருக்கு லேசான பாதிப்பே உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், 90%- க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.

சுமார் 116 கிராம் தங்கத்தை வாயில் வைத்து கொண்டு வந்த ஊழியர் – பீப் சத்தம் மூலம் சிக்கினார்!

கொரோனா பரவல் அதிகரித்துள்ள பகுதிகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, Geylang East Ave 2- ல் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சிவன் கோயில் மூடப்படுவதாக இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் இன்று (10/02/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்ரீ சிவன் கோயில் வரும் பிப்ரவரி 14- ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். கோயில் வளாகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்திய பயணிகளுக்கு குட் நியூஸ்… கட்டுப்பாடுகளை தளர்த்தியது இந்திய அரசு!

பக்தர்களின் பாதுகாப்பையும், நலனையும் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றாடச் சேவைகள் ரத்து செய்யப்படும். இது குறித்து உங்களின் புரிந்துணர்வையும், ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கு, கோயிலின் 67434566 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.