வெளிநாட்டு ஊழியர்களே சிங்கப்பூர் கிளம்ப ரெடியா இருங்க… கட்டுமானத் துறையில் எகிறும் தேவை – பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி!

workplace injury compensation-limits update mom
(Photo by Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூரின் கட்டுமானத் துறை இந்த ஆண்டு தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை எட்ட உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதாவது கடந்த 2021இல் நான்காம் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2.9% வளர்ச்சியை கட்டுமானத் துறை பதிவு செய்தது.

தமிழ்நாட்டின் வங்கியில் இருந்து சிங்கப்பூரில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியுமா?

கட்டுமான துறை தேவை குறித்து இங்கிலாந்தின் டர்னர் & டவுன்சென்ட் நிறுவனம் ஆய்வு நடத்தியது.

இந்த 2022ஆம் ஆண்டில் கட்டுமான துறையில் US$23 பில்லியன் வரை தேவை இருக்கும் என்று சிங்கப்பூரின் கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் கணித்துள்ளது.

இருப்பினும், கட்டுமானத் துறையானது நீண்டகால ஊழியர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

2021 செப்டம்பர் மற்றும் 2022 பிப்ரவரிக்கும் இடையில் அரசாங்கத்தின் ஊழியர் தக்கவைப்புத் திட்டத்தால் அந்த பற்றாக்குறை சிறிது குறைக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் அதிக செலவு, கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகவும் பற்றாக்குறை நிலவியது.

தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்திடம் பண மோசடி… சிங்கப்பூரில் இருந்து தஞ்சை வந்த நபரை தூக்கிய போலீஸ் – மேலும் சிலருக்கு வலைவீச்சு!

கூடுதலாக, எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக கட்டுமானத் துறை பாதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள டர்னர் & டவுன்சென்ட் நிர்வாக இயக்குனர் Khoo Sze Boon கூறுகையில்: “சிங்கப்பூரின் கட்டுமானத் துறையானது வளர்ச்சியை நோக்கிய பாதையில் செல்வதைக் காண்கிறோம்” என்றார்.

கோல்டன் மைல் காம்ப்ளெக்ஸில் சண்டை (வீடியோ): 4 பேரை கைது செய்தது போலீஸ்