சாங்கி கிழக்கு பணிமனையின் கட்டுமான ஒப்பந்தத்தைப் பெற்ற சீன நிறுவனம்!

Photo: Land Transport Authority Facebook Page

 

சிங்கப்பூரில் தரைவழி போக்குவரத்து ஆணையம் (Land Transport Authority) என்ற ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அதில், “கிராஸ் ஐஸ்லேண்ட் லைனுக்கான (Cross Island Line- CRL) சாங்கி கிழக்கு பணிமனையின் (Changi East Depot) வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்திற்கான ஒப்பந்தத்தை சீனா ஜிங்கியே இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளைக்கு (China Jingye Engineering Corporation Limited) வழங்கியுள்ளோம். இந்த நிறுவனத்திற்கு சிங்கப்பூரின் உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு திட்டங்களில் நல்ல அனுபவம் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது பெடோக் தெற்கு நிலையத்தில் (Bedok South Station) கட்டுமான பணிகளையும், தாம்சன் கிழக்கு கடற்கரை (Thomson East Coast Line- TEL) பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கானப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

 

சாங்கி கிழக்கு பணிமனை பற்றிய சில செயல்பாடுகள் குறித்துப் பார்ப்போம்.
இது சிஆர்எல் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தைக் கொண்டிருக்கும். இது 70 சிஆர்எல் ரயில்களுக்கு நிலை மற்றும் பராமரிப்பு வசதிகளை வழங்கும். இது 57 ஹெக்டேர் நிலப்பரப்பை உள்ளடக்கியது. இந்த நிலப்பரப்பு சுமார் 80 கால்பந்து மைதானங்களுக்கு சமமானது. சாங்கி கிழக்கு பணிமனைக்கான (Changi East Depot) பணிகள் 2ஹெச் 2021-ல் தொடங்கி 2030- ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டுமானம் எதிர்கால முன்னேற்றங்களுக்கு உதவும். கிட்டத்திட்ட பாதி மற்ற ரயில் பாதைகளுடன் பரிமாற்றமாக இருப்பதால், இந்த ரயிலில் பயணம் செய்வதும் எளிதாகவும், வசதியாகவும் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.