சிங்கப்பூரில் அதிகரித்த கோவிட்-19 தொற்று விகிதம்… மீண்டும் கட்டுப்பாடுகளோ என்ற அச்சத்தில் ஊழியர்கள்!

Pic: File/TODAY

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று பரவல் குறித்த வாராந்திர தொற்று பரவல் விகிதம் 1க்கு மேல் உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த 1க்கு மேலே உள்ள தொற்று பரவல் விகிதம், புதிய வாராந்திர கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பை குறிக்கிறது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் சமீபகால வேலையிட மரணங்கள்: “இது மிக அதிகம், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” – பிரதமர் லீ

அதாவது, நேற்றைய (மே 8) நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 2,423 பேருக்கு கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மே 8 பாதிப்பு விவரம்:

உள்நாட்டில் பாதித்தவர்கள்: 2,269 பேர்

வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தவர்கள்: 154 பேர்

உயிரிழந்தவர்கள்: 2 பேர்

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் 1,217,922 கோவிட்-19 பாதிப்புகளும், 1,352 இறப்புகள் பதிவாகியுள்ளன.

மருத்துவமனையில் உள்ளோர் விவரம்:

மருத்துவமனையில் உள்ள நோயாளிகள்: 240 பேர்

ஆக்ஸிஜன் கூடுதலாக தேவைப்படுவோர்: 15

ICU அவசர சிகிச்சை பிரிவில்: 6 பேர்

இந்த அதிகரிப்பினால் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது.

மிக பெரிய அளவில் ஏதும் சம்பவங்கள் நிகழ்ந்திராத வரை கடும் கட்டுப்பாடுகள் இல்லை என நாம்  எதிர்பார்க்கலாம்.

நாம் அனைவரும் பாதுகாப்புடன், அரசாங்கம் சொல்வதை கேட்டு விழிப்புடன் இருப்போம்.