ஃபைசர் தடுப்பூசி போட இனி முன்பதிவு அவசியமில்லை…

Pic: REUTERS/Edgar Su

கோவிட்-19 நோய் தொற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள ஃபைசர் பயோ என்டெக் தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் அனைத்து சிங்கப்பூரர்களும் இனி முன்பதிவின்றி, தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் இருந்தும், பல துறை மருந்தகங்களில் இருந்தும் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதனை சுகாதார அமைச்சின் நெருக்கடி நிலை உத்திபூர்வ, நடவடிக்கை குழுமத்தின் இயக்குனர் திரு. தினேஷ் வாசு டேஷ் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 10 முதல் தளர்த்தப்படும் சில கட்டுப்பாடுகள்..!

ஏற்கனவே இதுபோன்று, 11 சமூக தடுப்பூசி நிலையங்களில் எந்தவித முன்பதிவுமின்றி நேரடியாக சென்று மொடர்னா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது.

18 வயது நிரம்பிய சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதியில் தங்கியவர்கள் என எல்லோருக்கும் முன்பதிவின்றி மொடர்னா தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டிருந்தது.

இத்திட்டம் கூடிய விரைவில் ஃபைசர் பயோ என்டெக் தடுப்பூசிக்கும் வழங்கப்படும் என திரு. தினேஷ் கூறினார்.

இதுவரை சிங்கப்பூரில் ஃபைசர் பயோ என்டெக் தடுப்பூசியை 26 நிலையங்களில் போட்டு வருவதாகவும், கூடிய விரைவில் 80 சதவீத நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போட்டு கோவிட் -19 தொற்றிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும், அடுத்த கட்டமாக குறுகிய கால அனுமதியில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் தடுப்பூசி போட போவதாக திரு. தினேஷ் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் COVID-19 காரணமாக மேலும் ஒருவர் மரணம்: பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு.!