பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதாக 52 பேர் பிடிபட்டனர் – காவல்துறை விசாரணை

Singapore COVID-19 rules breach

சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறியது தொடர்பில் மொத்தம் 52 பேர் பிடிபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 9ஆம் தேதி, 18 சின் மிங் லேனில் (Sin Ming Lane) அமைந்துள்ள தொழிலியல் கட்டடத்தில் அதிக கூட்டம் தொடர்பில் அதிகாலை 3.10 மணிக்கு அழைப்பு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிங்கப்பூரர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வெளிநாட்டு ஊழியரின் தன்னலமற்ற செயல்!

காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்தபோது, ​​16 முதல் 36 வயதுக்குட்பட்ட 27 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் அடங்கிய குழுவினர், மது அருந்தியும், புகைபிடித்தும் மற்றும் பாடி கொண்டும் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை 2.45 மணியளவில், அதே பிரிவில் மற்றொரு கூட்டம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்தபோது, ​​19 முதல் 36 வயதுக்குட்பட்ட 7 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் அடங்கிய குழு, அந்த பிரிவில் குடித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு சம்பவங்களின் போதும் அந்த பிரிவின் உரிமையாளர் அங்கு இருந்துள்ளார், இந்த வழக்கின் சாட்சியாக மது பாட்டில்கள் மற்றும் ஆடியோ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த 52 நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

பொது பொழுதுபோக்கு அல்லது மதுபானங்களை வழங்க அங்கு உரிமம் இல்லை என்று ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சாலை வடிகால் கம்பியின் இடைவெளியில் சைக்கிள் சிக்கி விபத்து – வெளிநாட்டவர் மருத்துவமனையில்…