சிங்கப்பூரில் பயணிகளுக்கான சோதனை முறை கடுமை: VTL விமான பயணிகளுக்கும் கடும் சோதனை

singapore visa removed

சிங்கப்பூர் VTL பயண ஏற்பாடு திட்டத்தின் விரிவாக்கம் நிறுத்தப்பட்டது என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்தார்.

கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட இருந்த இந்த VTL திட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேடப்பட்டு வந்த தமிழக ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து வந்தவரை வளைத்து பிடித்த போலீசார்

கூடுதலாக, VTL விமானப் பயணிகளின் தினசரி ஒதுக்கீட்டை, முன்னர் முடிவு செய்த 15,000ஆக உயர்த்துவதற்குப் பதிலாக 10,000ஆக கடைபிடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூருக்கான புதிய VTL விமானம் மற்றும் பேருந்து டிக்கெட்டுகளின் விற்பனையும் கடந்த டிசம்பர் 23, 2021 முதல் ஜனவரி 20, 2022 வரை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், VTL பயணிகளுக்கான சோதனை முறையும் கடுமையாக்கப்பட்டுள்ளது, என்றார் அமைச்சர் எஸ் ஈஸ்வரன்.

Pre-departure என்னும் புறப்படுவதற்கு முந்தைய மற்றும் on-arrival என்னும் வருகையின்போது மேற்கொள்ளப்படும் கோவிட்-19 சோதனைகளைத் தவிர, VTL பயணிகள் சிங்கப்பூருக்கு வந்த 2 முதல் 7 நாட்களில் தினசரி சுயமான ART சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், “பாசிடிவ்” சோதனை முடிவு வந்தால் அதனை உறுதிப்படுத்தும் PCR சோதனைக்கு அவர்கள் உட்பட வேண்டும்.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த 11 சதவீத நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு