சிங்கப்பூரில் சைக்கிளும், கனரக வாகனமும் மோதிய விபத்தில் 14 வயது இளைஞர் பலி.!

Singapore cyclist died
Pic: FB//SG Road Vigilante

சிங்கப்பூர் மரினா ஈஸ்ட் டிரைவில் (Marina East Drive) சைக்கிளுடன் கனரக வாகனம் மோதிய விபத்தில் 14 வயது இளைஞர் உயிரிழந்ததாக காவல்துறை கூறியுள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினரிடம் கடந்த திங்கட்கிழமை (31-05-2021) அன்று தகவல் தெரிவிக்கப்பட்டது. கனரக டிரெய்லர் வாகனத்தை ஓட்டிய நபர் 37 வயதுமிக்க ஆடவராவார்.

இந்திய கோவிட் நிவாரண நிதி: ஒரு மில்லியன் வெள்ளி வாரி வழங்கிய சிங்கப்பூர் அமைப்புக்கள்.!

இவர் கவனமின்றி வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சைக்கிளோட்டியான அந்த 14 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சைக்கிள் ஒன்று சாலையின் நடுப்பகுதியில் கிடப்பது போன்ற விபத்தின் படங்கள் SG Road Vigilante-ன் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

எஸ்பிஎஸ் போக்குவரத்து நிறுவனத்தின் அறிவிப்பு!