இந்திய கோவிட் நிவாரண நிதி: ஒரு மில்லியன் வெள்ளி வாரி வழங்கிய சிங்கப்பூர் அமைப்புக்கள்.!

Singapore help india
Pic: PTI

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மீண்டெழுவது என்பது மிகப்பெரும் சவாலான காரியமாக இருந்துவருகிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழில்சபை (SICCI) மற்றும் LISHA என அழைக்கப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம் இணைந்து இந்தியாவின் கொரோனா நிவாரண நிதிக்கு சுமார் ஒரு மில்லியன் வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.

போலி இணையதளம் அறிவுறுத்திய மனிதவள அமைச்சகம்!

இந்தியாவில் COVID-19 கிருமித்தொற்று நிலவரத்தைக் கையாள்வதற்கு உதவ
பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுடன் தனிநபர்களும் இந்த நிவாரண நிதிக்கு உதவியதாக இந்த  அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்துடன் (Singapore Red Cross) இணைந்து இந்த நிதித் திரட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், இன்று (03-06-2021) நடைபெற இருக்கும் இணையச் சந்திப்பில், சிங்கப்பூருக்கான இந்திய தூதரக உயர் அதிகாரி பி.குமரன் அவர்களின் முன்னிலையில் ஒரு மில்லியன் வெள்ளி மதிப்புள்ள காசோலை வழங்கப்படும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் திறக்கப்படுகிறது உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம்!