சிங்கப்பூரில் மேலும் 15 பேர் கொரோனா தொற்றால் மரணம்

Pic: Today/File

சிங்கப்பூரில் வியாழக்கிழமை (அக் 28) நிலவரப்படி, மேலும் 15 பேர் கிருமித்தொற்றால் இறந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

அவர்கள் 62 மற்றும் 98 வயதுக்கு உட்பட்டவர்கள், மேலும் அவர்களுக்கு பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன.

இந்திய ஊழியர்களை பெரிதும் சார்ந்துள்ள நிறுவனங்கள் – கட்டுப்பாடுகள் தளர்வுக்கு மகிழ்ச்சி

அந்த பிரச்சனைகள் என்ன என்பதை சுகாதார அமைச்சகம் குறிப்பிடவில்லை.

இதன் மூலம் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 364ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை (அக் 28) நிலவரப்படி புதிதாக 3,432 பேருக்கு COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தினசரி பாதிப்பு அதற்கு முதல் நாள் புதன்கிழமை 5,324 என இருந்தது, தற்போதைய பாதிப்பை விட அது 1,892 அதிகம்.

சமூகத்தில் 3,171 பேரும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 252 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

விடுதிகளில் முடங்கி கிடக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் எப்படி உதவுவது?