சிங்கப்பூர் துணை பிரதமருக்கு ஜெர்மனியில் Covid-19 உறுதி செய்யப்பட்டது – திரு.Heng-ன் முகநூல் பதிவு

DPM Heng step aside as leader of 4G team
(PHOTO: MCI Photo by Terence Tan. Facebook/Heng Swee Keat)

சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கீட், ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட உடனே,நேற்றுக் காலை அவரது முகநூல் பதிவில் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.ஜெர்மனியின் பெர்லின் நகரில் இருந்த போது,சனிக்கிழமை அன்று தனக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

லண்டனில், “லண்டன் டெக் வீக்” என்னும் தொழில் மாநாட்டில் ,ஜூன் 12-ஆம் தேதி கலந்து கொண்டார்.பின்னர் ஜூன் 16-ஆம் தேதி பெர்லினை சென்றடைந்தார்.அவர் தமது பயணம் முழுவதும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற சுகாதாரக் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்த போதிலும் தொற்று ஏற்பட்டு விட்டதாக அவரது பதிவில் தெரிவித்துள்ளார்.

தொற்றுக்கான கடுமையான அறிகுறிகள் இல்லை என்றும் காலையில் எழுந்திருக்கும் போது தொண்டை வறட்சி இருந்ததாகவும் தெரிவித்த அவர் ,நல்லவேளையாக மூன்று தடுப்பூசிகளையும் போட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் தற்போது விடுதி ஒன்றில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் ‘பாயின்ட் சீரோ’ கருத்தரங்கில் திரு.ஹெங் பங்கேற்பதாக இருந்தது.ஆனால் தற்போது அதில் பங்கேற்க இயலாமைக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MFA) இலாப நோக்கற்ற அமைப்பான எலிவேண்டிமற்றும் அனைத்துலக நிதிக்கான சுவிஸ் செயலகமும் இணைந்து இந்த கருத்தரங்கினை ‘ சூரிக் ’நகரில் நாளை முதல் வியாழக்கிழமை வரை நடத்துகிறது.