‘Singdollar’ காசோலை குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையமும், சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

'Singdollar' காசோலை குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையமும், சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
File Photo

 

 

சிங்கப்பூர் நாணய ஆணையமும் (Monetary Authority of Singapore- ‘MAS’), சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் (Association of Banks in Singapore- ‘ABS’) கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “Singdollar காசோலைக்கு வங்கிகள் சார்பில் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூர் டாலர் காசோலையை (Singapore dollar cheques) எழுதி வங்கியில் கொடுக்கும் வாடிக்கையாளர்கள், அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்த புதிய நடைமுறை வரும் நவம்பர் மாதம் 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

லிஷா & லிஷா இலக்கிய மன்றம் இணைந்து வழங்கும் சிறப்பு பட்டிமன்றம்!

சிங்கப்பூரில் உள்ள DBS, UOB, OCBC, Citibank, HSBC, Maybank, Standard Chartered ஆகிய ஏழு வங்கிகள் சிங்கப்பூர் டாலர் காசோலைக்கான கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும். எனினும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மற்றும் காசோலைகள் மூலம் வங்கியில் டெபாசிட் செய்யும் நபர்களுக்கு தனித்தனி கட்டணங்கள் விதிக்கப்படும்.

மற்ற வங்கிகளில் அடுத்தாண்டு ஜூலை மாதம் முதல் காசோலைக்கான கட்டண வசூல் அமலுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் காசோலை பயன்பாடு சீராக குறைந்து வருகிறது. ஆன்லைன் எனப்படும் மின்னணு முறையிலான பணப்பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளது.

சென்னையில் தென்னிந்திய உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட்ட சிங்கப்பூர் அமைச்சர்!

வருடாந்திர காசோலை பரிவர்த்தனை அளவு 2016- ஆம் ஆண்டு 61 மில்லியன் ஆக இருந்த நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு 19 மில்லியனாக கிட்டத்தட்ட 70 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.