சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு ஓய்வு நாள் கட்டாயம் – MOM அறிவிப்பு

migrant-domestic-workers mental-distress
(Photo: TRT World and Agencies)

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு ஓய்வு நாள் குறித்த அறிவிப்பை மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாதத்திற்குக் குறைந்தபட்சம் ஒரு நாள் ஓய்வு தினமாக வழங்க வேண்டும் என்று MOM கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த 2 ஊழியர்கள் கைது – சிறையில் அடைப்பு

அதற்கு பதிலாக வேலை பார்க்க வைத்து சம்பளம் கொடுத்து சரிக்கட்டலாம் என்ற முயற்சியும் கூடாது என அது திட்டவட்டமாக கூறியுள்ளது.

அப்போது அவர்கள் என்ன செய்யலாம் என்ற பரிந்துரையும் அமைச்சகம் வழங்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

ஓய்வு நாளில் முதலாளிகளுக்கு வேறு மாற்று ஏற்பாடு தெரிவு குறித்தும் பரிந்துரை வழங்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.