கொரோனா: வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவர், சமூகத்தில் 4 பேர் உட்பட 24 பேர் பாதிப்பு

Singapore dormitory community covid-19
(Photo: TODAY)

சிங்கப்பூரில் இன்றைய (ஜன., 16) மதிய நிலவரப்படி, புதிதாக 24 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய சம்பவங்களில், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

இனி அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிக்கலாம்!

உள்நாட்டில், சமூக அளவில் புதிதாக 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

புதிய பாதிப்புகளில், மீதமுள்ள 19 பேர் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்கள்.

அவர்கள் இங்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் வைக்கப்பட்டனர் அல்லது வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று MOH தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இந்த கிருமித்தொற்றால் மொத்தம் இதுவரை 59,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும்.

சிங்கப்பூரில் கனமழையை தொடர்ந்து… அடுத்த 2 வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?