சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிப்பு குறைவு; இன்று முதல் சில கட்டுப்பாடுகள் தளர்வு.!

Singapore eases Covid restrictions
(Photo: Reuters)

சிங்கப்பூரில் சமூக அளவில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் குறைந்து வரும் நிலையில், சில கட்டுப்பாடுகள் இன்று முதல் (14-06-2021) தளர்த்தப்படுகின்றன.

மூன்றாம் கட்டக் கூடுதல் விழிப்புநிலையின்கீழ், இரண்டு கட்டங்களாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஒன்றுகூடல்களில் இன்று முதல் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டிலிருந்து 5ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 5 பேர் வரை சமூக ஒன்றுகூடல்களில் கலந்து கொள்ளலாம்.

சிங்கப்பூரில் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் சாங்கி ஜுவல் மால்.!

ஒரு நாளில் ஐந்து நபர்கள் மட்டுமே ஒரு வீட்டிற்கு வருகைதர அனுமதி உண்டு,
ஒரு நாளில் இரண்டு ஒன்றுகூடல்களில் மட்டுமே அவர்கள் கலந்துகொள்ள முடியும்.

முகப்பராமரிப்புப் போன்ற சேவைகளும் இன்று மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஹோட்டல் அறைகளில் 5 பேர் வரை தங்குவதற்கு அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.

சாங்கி ஜுவல் மால் ஒரு மாத காலத்திற்கு பின்னர் இன்று‌ மீண்டும் திறக்கப்படுகிறது. சாங்கி ஜுவலில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் மட்டும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. கோவிட்-19 நிலவரத்தைப் பொருத்து இன்னும் ஒரு வாரத்தில் உணவு பானக்கடைகள் மீண்டும் செயல்படத் அனுமதிக்கப்படும்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் தொடர்ந்து கட்டுக்குள் இருந்தால் அடுத்த வாரத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

கொலை முயற்சி: 60 வயது முதியவர் கைது!