அனைத்து துறைகளிலும் வெளிநாட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு குறைவு

singapore job foreign workers workplace rules
(Photo: Roslan Rahman/ Getty Image)

சிங்கப்பூரின் 2020ஆம் ஆண்டில் மொத்த வேலைவாய்ப்பு, 20 ஆண்டுகளுக்கு மேலாக காணாத கடுமையான வீழ்ச்சியை கண்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூரர் அல்லாத ஊழியர்கள் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (மார்ச் 16) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் அதிக வருகையாளர்களை கொண்ட பொது இடங்களில் SafeEntry Gateways பதிவு முறை..!

ஊழியர் சந்தை அறிக்கை 2020இன் படி, வீட்டுப் பணிப்பெண்களைத் தவிர, கடந்த ஆண்டு 166,600ஆக மொத்த வேலைவாய்ப்பு சுருங்கியது.

மேலும், கடந்த ஆண்டு சிங்கப்பூரர் அல்லாதவர்களின் எண்ணிக்கை 181,500 குறைந்துள்ளது.

2020ஆம் ஆண்டில் 26,110 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர், இது 2019ஐ விட இரண்டு மடங்கு அதிகம்.

அனைத்து துறைகளிலும் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு சரிவை சந்தித்தது.

உற்பத்தித் மற்றும் கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்பு அதிகளவில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் தனது எல்லைகளை மீண்டும் எப்போது திறக்கும்?