சிங்கப்பூரில் முகக்கவசம் அணிவது எங்கு கட்டாயம்? எங்கு கட்டாயம்மில்லை? – வாங்க பார்க்கலாம்!

Pic: Aaron Low/TODAY

சிங்கப்பூர் COVID-19 தொற்றுநோயிடன் வாழ்வதற்கான தீர்க்கமான நகர்வை மேற்கொள்வதாக பிரதமர் லீ சியன் லூங் நேற்று (மார்ச் 24) உரையின் போது கூறினார்.

சிங்கப்பூரில் வரும் மார்ச் 29 முதல், வெளி இடங்களில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பமாக மாறும், கட்டாயமாக இருக்காது என அவர் குறிப்பிட்டார்.

வெளியில் முகக்கவசம் அணிவது விருப்பமானது என்றாலும், அது உள் இடங்களுக்குள் (Indoors) தேவை என்று திரு லீ, நிலைமையை COVID-19 மேம்படுத்துவது குறித்த உரையில் கூறினார்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்.!

புதிய விதிமுறைகளின்படி உள்புற இடங்களில் (Indoors) முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். சிங்கப்பூரில் முகக்கவசம் அணிவது எங்கு கட்டாயம், கட்டாயமில்லை என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டிய உள் இடங்கள்:

  • பேருந்து மற்றும் ரயில்கள்
  • உணவங்காடி நிலையங்கள்
  • காப்பிக் கடைகள்
  • கடைத்தொகுதிகள்
  • ஈரச்சந்தைகள்
  • சில்லறைக் கடைகள், கடைவீடுகள்
  • அலுவலகக் கட்டடங்கள்
  • நூலகங்கள் மற்றும் வகுப்பறைகள்
  • மின்தூக்கிகள் (Crane)

முகக்கவசம் அணிய கட்டாயமில்லாத வெளி இடங்கள்: (விருப்பப்பட்டால் அணியலாம்)

  • பூங்காக்கள்
  • திடல்கள்
  • இயற்கை வனப் பாதைகள்
  • திறந்தவெளி நடைபாதைகள்
  • மேம்பாலங்கள்
  • பேருந்து நிறுத்தங்கள்
  • ஐந்தடி பாதைகள்
  • வெற்றுத்தளங்கள்
  • சில்லறைக் கடை நடைபாதைகள்
  • இயற்கை வெளிச்சம் நிறைந்த பேருந்து நிலையங்கள்

தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு எல்லைகளை திறக்கும் “சிங்கப்பூர்-மலேசியா” – கோவிட்-19 சோதனைகள் இல்லை!