தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு எல்லைகளை திறக்கும் “சிங்கப்பூர்-மலேசியா” – கோவிட்-19 சோதனைகள் இல்லை!

Nigel Chua

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே ஏப்ரல் 1 முதல் நில எல்லை வழியாக இரு நாட்டு மக்களும் பயணிக்க முடியும்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மட்டும் இதில் பயணிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிமுறைகள் அதிரடி தளர்வு – என்னென்ன? வாங்க பார்ப்போம்!

மேலும், அவர்களுக்கு கோவிட்-19 சோதனைகள் இல்லை என்றும், அனைத்து போக்குவரத்து முறைகளிலும் தனிமைப்படுத்தல் இல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே போல, இரு எல்லைகளுக்கு இடையே வாகனம் ஓட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான பயணிகளும் இதற்கு தகுதியானவர்கள்.

இதனை பிரதமர்கள் லீ சியென் லூங் மற்றும் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஆகியோர் இன்று (மார்ச் 24) கூட்டறிக்கையில் வெளியிட்டனர்.

Breaking: VTL விமானங்கள் தேவையில்லை… அனைத்து பயணிகளும் ஏப்ரல் 1 முதல் தனிமையின்றி சிங்கப்பூர் வரலாம்!