சிங்கப்பூரில் இந்த ஆண்டு தீமிதித் திருவிழா குறித்து இந்து அறக்கட்டளை வாரியத்தின் அப்டேட்..!

Singapore Firewalking Festival
Singapore Firewalking Festival

சிங்கப்பூரில் இந்த ஆண்டு தீமிதித் திருவிழா, கிருமித்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக சிறிய அளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடாந்திர தீமிதித் திருவிழா சிங்கப்பூரில் இந்து சமூக மக்களுக்காக நடத்தப்படும் குறிப்பிடத்தக்க மத நிகழ்வாகும்.

இதையும் படிங்க : குறிப்பிட்ட 9 நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் குறித்த அறிவிப்பு..!

இந்த திருவிழா அடுத்த மாதம் 1ஆம் தேதி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பு மற்றும் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து தொடங்கும் ஊர்வலமும் நடைபெறாது என்று இந்து அறக்கட்டளை வாரியம் (HEB) தெரிவித்துள்ளது.

தீமிதி தினத்தன்று, ஸ்ரீமாரியம்மன் கோவிலிலுக்கு பக்தர்கள் செல்ல இயலாத காரணத்தால், கோவிலுக்கு வெளியே கூட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Photo: HEB

அதே போல சமய சடங்குகளில் முக்கிய பங்கு வகிப்போர், மகா பாரத கதைகளை ஏற்று நடிக்கும் தொண்டு ஊழியர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

அனைத்து நிகழ்வுகளையும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையதளத்தில் நேரடியாகக் காணலாம்.

இதையும் படிங்க : இந்தியா வரும் பயணிகள் அரசு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறலாம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…