குறிப்பிட்ட 9 நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் குறித்த அறிவிப்பு..!

Singapore stay-home notice update
(PHOTO: Greg Waldron)

சிங்கப்பூரில் அடுத்த மாதம் நவம்பர் 4 முதல், பிரத்யேக தங்கும் வசதிக்கு பதிலாக வசிக்கும் வீட்டிலேயே 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு (Stay-home notice) நிறைவேற்ற கூடுதலான நாடுகளை சேர்ந்த பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

அவை, எஸ்தோனியா (Estonia), பிஜி (Fiji), பின்லாந்து, ஜப்பான், நார்வே, தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் என்று செய்தி வெளியீட்டில் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியா வரும் பயணிகள் அரசு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறலாம்..!

இதில் குறிப்பாக, பிரத்யேக வசதியில் தங்குவதைத் தவிர்ப்பதற்கு, மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து பயணிப்பவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன்பு கடந்த 14 நாட்களில் வேறு எந்த நாட்டிற்கும் சென்றிருக்கக்கூடாது.

வசிக்கும் இடத்திலோ அல்லது அதே காலகட்டத்தில், அதே பயணம் மேற்கொண்டு, வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றுவோர்களுன் அவர்கள் தனியாக வசிக்க வேண்டும்.

வரும் நவம்பர் 4 அல்லது அதற்குப் பிறகு வருகை தரும் பயணிகள், ஒதுக்கப்பட்ட பிரத்யேக இட வசதிகளைத் தவிர்ப்பதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 2ஆம் தேதி முதல் பெறலாம்.

சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகள், சிங்கப்பூர் வருவதற்கு முன்னர் Safe Travel Office வலைத்தளத்தில் விலக்கு கோரி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் லாரி மற்றும் பேருந்து மோதி விபத்து..!

இதையும் படிங்க : சிங்கப்பூரில் TraceTogether சாதனத்தை சேதப்படுத்துவது சிறை செல்ல வழிவகுக்கும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…