சிங்கப்பூரில் TraceTogether சாதனத்தை சேதப்படுத்துவது சிறை செல்ல வழிவகுக்கும்..!

Tampering TraceTogether token jail
(PHOTO: Reddit & WhatsApp)

சிங்கப்பூரில் TraceTogether சாதனத்தை பயனற்றதாக மாற்ற அல்லது ஏதேனும் இடையூறு செய்வதற்காக அதனை சேதப்படுத்துவது குற்றம் ஆகும்.

வழக்கறிஞர் ஜோசுவா டோங் (Joshua Tong) The New Paper-யிடம் கூறுகையில்: அந்த சாதனங்களில் சேதம் அல்லது மாற்றங்கள் இருந்தால், அந்த குற்றத்திற்கு பொறுப்பேற்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இதையும் படிங்க : லிப்ட் கதவுகளைத் திறந்து வைக்காததால் பெண்ணைத் தாக்கிய ஆடவரும் அபராதம்..!

இந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் / அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது.

பொது சுகாதார சேவைக்கு இடையூறு விளைவிக்கும் குற்றச்சாட்டுக்கும் சாதனங்கள் சேதப்படுத்தியவர் மீது குற்றம் சாட்டப்படலாம்.

இதற்கு கடுமையான தண்டனையாக, 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் / அல்லது அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

TraceTogether சாதனம் சிங்கப்பூர் அரசாங்கத்தின் சொத்து என்பதால், அதனை அணுகுவது, தரவை மாற்றவோ அல்லது தவிர்க்கவோ சேதப்படுத்துவது சட்டப்படி குற்றம் ஆகும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த புதிய இடங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…