சிங்கப்பூரில் லாரி மற்றும் பேருந்து மோதி விபத்து..!

bus truck collide Chai Chee
PHOTO: Mothership

சிங்கப்பூரில் லாரி மற்றும் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது இரண்டும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது.

நேற்று காலை 7:33 மணியளவில் சாய் சீ ரோடு (Chai Chee Road) மற்றும் சாய் சீ ஸ்ட்ரீட் (Chai Chee Street) இடையேயான போக்குவரத்து சந்திப்பில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்தது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் எந்த புதிய பாதிப்புகளும் இல்லை..!

இரண்டும் மோதிய பின்னர், அந்த சந்திப்பில் குறைந்தது இரண்டு பாதைகள் அந்த பேருந்து நின்றதன் காரணமாக தடைப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஆறு பேர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.

இந்த விபத்து காரணமாக, அந்த சாலைகளை இயக்கும் பொது பேருந்துகள் திருப்பி விடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் TraceTogether சாதனத்தை சேதப்படுத்துவது சிறை செல்ல வழிவகுக்கும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…