சிங்கப்பூரில் முதல் குரங்கம்மை தொற்று.. வெளிநாட்டவருக்கு உறுதி – நெருங்கிய தொடர்புகளுக்கு தனிமை

monkeypox

சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் பதிவான முதல் குரங்கம்மை தொற்று குறித்த தகவலை சுகாதார அமைச்சகம் (MOH) செய்திக்குறிப்பில் தெரிவித்து அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அவர் 45 வயதான மலேசியர் ஆவார், அவருக்கு நேற்று ஜூலை 6 அன்று நோய் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டதாக MOH தெரிவித்துள்ளது.

ஓட்டுனரும், பெண்ணும் மாறி மாறி விடாப்பிடி சண்டை; சிங்கப்பூரில் வைரலான வீடியோ – களத்தில் இறங்கிய போலீஸ்!

தற்போது அவர் தொற்று நோய் தடுப்பு தேசிய நிலையத்தில் (NCID) சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாக MOH குறிப்பிட்டுள்ளது.

இவருக்கும், கடந்த ஜூன் 21 அன்று வெளிநாட்டில் இருந்து வந்து குரங்கம்மை உறுதி செய்யப்பட்ட நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைத்து நபர்களும் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவர்.

தொடர்புத் தடமறியும் பணிகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் பணியில் இருந்த தமிழ் ஊழியர் மீது தாக்குதல் (Video) – வலுக்கும் கண்டனம்!