சிங்கப்பூரில் கனமழை… திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை

Singapore flash flood
(Photo: So Solomon)

சிங்கப்பூரில் பலத்த மழை காரணமாக, சில பகுதிகளில் வடிகால்கள் மற்றும் கால்வாய்களில் நீர்மட்டம் 90%ஐ எட்டியுள்ளன.

அதன் காரணமாக சில பகுதிகளில் திடீர் வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கனமழை: சில சாலைகளில் வெள்ளப்பெருக்கு…SCDF உதவி!

பின்வரும் பகுதிகளைத் தவிர்க்கவும் பொதுப் பயனீட்டுக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • பாசீர் ரிஸ் ஃபார்ம்வே 3
  • Lor Halus (TPE சாலையை நோக்கி)
  • Jln Seaview

இன்று ஜனவரி 2 ஆம் தேதி காலை 8.40 – 10 மணி வரை சிங்கப்பூரில் மிதமான மழை பெய்துள்ளது. மேலும் சில இடங்களில் கனமழையும் பெய்ததாக NEA வரைபடங்கள் காட்டுகின்றன.

புதியவகை கொரோனா: எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் சிங்கப்பூர்!

நேற்று புத்தாண்டு தினத்தில் பெய்த மழையால் சிங்கப்பூரில் சில சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதில், பாசீர் ரிஸ் ஃபார்ம்வே 3 (Pasir Ris Farmway 3) மற்றும் லோராங் ஹாலஸ் (Lorong Halus) சந்திப்புக்கு அருகே 4 வாகனங்களுக்கு SCDF அதிகாரிகள் உதவி செய்தனர்.

சிங்கப்பூரில் சாலையை கடந்த ஆடவர் மீது லாரி மோதி விபத்து – காணொளி

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…