இந்திய அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Ministry Of Foreign Affairs, Singapore

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், டெல்லியில் நடைபெற்ற சிறப்பு ஆசியான்- இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் (Special ASEAN-India Foreign Ministers’ Meeting) கூட்டத்தில் கலந்துக் கொண்டார். முன்னதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார்.

தீவிர பயிற்சியில் சிங்கப்பூர், அமெரிக்க ராணுவம் – எதற்கு பயிற்சி நடவடிக்கை?

அதைத் தொடர்ந்து, ஆசியான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தனித்தனியே சந்தித்துப் பேசினர். பின்னர், அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர். அவருடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து, நேற்று (17/06/2022) அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இந்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Minister of Petroleum and Natural Gas and Minister of Housing and Urban Affairs Hardeep Singh Puri), இந்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை (Minister of Railways, Communications and Electronics & Information Technology Ashwini Vaishnaw) சந்தித்துப் பேசினார்.

எதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்ந்தது ? – சிங்கப்பூரின் எரிபொருள் ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள்

சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை அமைச்சர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். அவர்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் மற்றும் எரிசக்தி, தகவல் தொடர்பு, நிதி மற்றும் டிஜிட்டல் துறைகள் உட்பட இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகுதிகள் குறித்து விவாதித்தனர்.

Photo: Ministry Of Foreign Affairs, Singapore

ஜூன் 16- ஆம் தேதி அன்று டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஏற்பாடு செய்திருந்த இந்திய இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் தேநீர் விருந்தில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துக் கொண்டார்.

‘சும்மாவா சொன்னாங்க கடன் அன்பை முறிக்கும்முன்னு’ – இனி காவல்துறையிடம் உரிமம் பெற வேண்டும்

இதனிடையே, இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் நாடு திரும்பினார்.