செமேரு எரிமலை வெடித்தது…. சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

video crop image

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த டிசம்பர் 4- ஆம் தேதி அன்று இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவாவில் (East Java) உள்ள செமேரு எரிமலை (Mount Semeru Eruption) வெடித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகள் செமேரு எரிமலைக்கான எச்சரிக்கை அளவை நான்காக உயர்த்தியுள்ளனர். இதையடுத்து, இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தணிப்பு நிறுவனம் (PVMBG) குடியிருப்பாளர்களை பள்ளத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்குமாறு எச்சரித்துள்ளது.

தேவையில்லாத பொருளா? சிங்கப்பூரில் உள்ள மறுசுழற்சி தொட்டியில் போடுங்க…ஏதோ ஒரு வகையில் பயன்படும்!

பள்ளத்திலிருந்து 17 கிலோமீட்டர் வரை பெசுக் கோபோகன் (Besuk Kobokan River) ஆற்றின் தென்கிழக்கு செமரு எரிமலையிலிருந்து எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம். செமேரு எரிமலை வெடித்ததன் காரணமாக, சிங்கப்பூரர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியமற்றப் பயணத்தை இந்த நேரத்தில் ஒத்திவைக்க வேண்டும்.

லுமாஜாங் மற்றும் மலாங்கில் உள்ள சிங்கப்பூரர்கள் செமேரு எரிமலைக்கு அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், சிங்கப்பூரர்கள் செமேரு எரிமலைச் சுற்றி நிலவும் சூழலை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். மேலும், தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாதிப்பு நமக்குத்தான் ! – காட்டுப்பன்றி மீது மோதியதில் காயமடைந்த நபருக்கு அறுவை சிகிச்சை!

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் https://eregister.mfa.gov.sg/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தூதரக உதவி தேவைப்படுபவர்கள் ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் (அல்லது) சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்:

ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம்:

அலுவலக நேரத்தில் செயல்பாட்டில் இருக்கும் +62 (21) 2995 0400 என்ற தொலைபேசி எண்ணையோ (அல்லது) 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால +62 811 863 348 என்ற உதவி தொலைபேசி எண்ணையோ தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்காக முழு விமானத்தையே ‘புக்’ செய்த ஜோடி!

24 மணி நேரமும் செயல்படும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தின் +65 63798800/63798855 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.