திருமணத்திற்காக முழு விமானத்தையே ‘புக்’ செய்த ஜோடி!

Photo: @Shreyaa_shaah Instagram Page

திருமணத்திற்காக ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஒரு முழு விமானத்தையே முன்பதிவு செய்து அசத்தியுள்ளது கல்யாண ஜோடி ஒன்று. ஸ்ரேயாஷா என்பவர் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளிநாட்டு ஊழியர் தீ விபத்தில் மரணம்! – நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் அறிக்கை!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் திருமண நிகழ்விற்காக ஸ்ரேயாஷாவின் சகோதரியும், அவரது வருங்கால கணவரும் சேர்ந்து ஒரு விமானத்தின் அனைத்து சீட்டுகளையும் ‘புக்’ செய்துள்ளனர். அந்த விமானம் முழுக்க மணமக்களின் உறவினர்கள் மட்டுமே ஆக்கரமித்திருந்த நிலையில், இணையவாசிகளை இந்த வீடியோ ஆச்சரியமடைய செய்துள்ளது.

முருகன் திருக்குன்றம் கோயிலில் இன்று நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம்!

தற்போதைய காலகட்டத்தில் திருமணம் செய்யும் இளம்ஜோடிகள், தங்கள் திருமணத்தில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவிற்கும், மக்களுக்கு பயன்படும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் புதுசு புதுசாக சிந்தித்து பல்வேறு விதமான முறையில் திருமணத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.