கொரோனா: துவாஸ் சவுத் தங்கும் விடுதியில் வசிக்கும் இந்திய நாட்டவருக்கு தொற்று!

Singapore foreign workers COVID-19
(PHOTO: Screenshot/Google Maps)

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் 37 வயதான இந்திய நாட்டவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அவர் Work Permit என்னும் வேலை அனுமதிச் சீட்டு பெற்றவர் என்றும், துவாஸ் சவுத் விடுதியில் (Tuas South Dormitory) வசிக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளுக்கும் கடுமையாகும் எல்லை நடவடிக்கை!

மேலும், அவர் Chevron Oronite Pte Ltd நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவருக்கு வழக்கமான சோதனையின் (RRT) போது கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொற்று கண்டறியப்பட்டது.

இதற்கிடையில், சக ஊழியர்கள் உட்பட நெருங்கிய தொடர்புகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் சோதிக்கப்படும், இதனால் அறிகுறி இல்லாத பாதிப்புகளை கண்டறிய முடியும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இனி அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிக்கலாம்!