சிங்கப்பூர் ‘Formula 1 Grand Prix’ கார் பந்தயத்தை முதன்முறையாக நேரில் கண்டு ரசித்த வெளிநாட்டு ஊழியர்கள்!

சிங்கப்பூர் 'Formula 1 Grand Prix' கார் பந்தயத்தை முதன்முறையாக நேரில் கண்டு ரசித்த வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: ItsRainingRaincoats

 

 

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கென்று இயங்கி வரும் தனியார் தன்னார்வ அமைப்பு ‘ItsRainingRaincoats’. இந்த அமைப்பு வெளிநாட்டு ஊழியர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து, அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

“இந்த வேலையை செய்யுங்க உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்” – ஏமாந்துபோன பல ஆயிரம் பேர்

அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள மரினா பேவில் சிங்கப்பூர் ‘Formula 1 Grand Prix’ 2023 கார் பந்தய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை வெளிநாட்டு ஊழியர்கள் காணும் வகையில் ‘ItsRainingRaincoats’ அமைப்பின் நிர்வாகிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 15- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இரவு சுமார் 50 வெளிநாட்டு ஊழியர்கள், வாகனம் மூலம் கார் பந்தயம் நடைபெற்ற மரினா பே இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டன. அதைத் தொடர்ந்து, கார் பந்தய நேரில் கண்டு ரசித்த வெளிநாட்டு ஊழியர்கள், உடனடியாக தங்களது குடும்ப உறுப்பினர்களை வீடியோ காலில் அழைத்து, கார் பந்தய போட்டிகளைக் காண்பித்து மகிழ்ந்தனர்.

லைஃப்ஸ்டைல்​, டிராவல் பொருட்களுக்கு 90% வரை அதிரடி தள்ளுபடி – இப்போதே முந்துங்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு குளிர்பானங்கள், உணவுகள் உள்ளிட்டவற்றை ‘ItsRainingRaincoats’ அமைப்பு வழங்கியிருந்தது. “கார் பந்தய போட்டியை முதன்முறையாக பார்த்தேன் என்று கூறும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர், இது வெளிநாட்டு ஊழியர்களை ஊக்கமும், உற்சாகமும் படுத்தும்” என்றார்

கார் பந்தய போட்டியை வெளிநாட்டு ஊழியர்கள் காண வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் மற்றும் ‘Singapore Grand Prix’ நிர்வாகத்தினர் ஆகியோர் பெரிதும் உதவியதாக ‘ItsRainingRaincoats’ அமைப்பு தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.