Breaking: VTL விமான, பேருந்து புதிய டிக்கெட் விற்பனை நிறுத்தம்

சிங்கப்பூர் விமானத் துறையில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட வேலைகள்
Lean Jinghui

தடுப்பூசி போடப்பட்ட பயண திட்டத்தின்கீழ் (VTL) விமானங்கள் மற்றும் பேருந்துகளுக்கான அனைத்து புதிய டிக்கெட் விற்பனையும் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாளை டிசம்பர் 23 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20 வரை டிக்கெட் விற்பனை முடக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று (டிசம்பர் 22) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடிகள் நீட்டிப்பு!!

வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து ஓமிக்ரான் கோவிட்-19 பாதிப்புகள் வெளிப்படாமல் இருக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே VTL விமானம் அல்லது பேருந்துக்கு டிக்கெட் பெற்ற பயணிகள், அனைத்து VTL தேவைகளைப் பூர்த்தி செய்யும் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத் திட்டத்தின்கீழ் தொடர்ந்து பயணிக்கலாம்.

மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 20க்குப் பிறகு VTL ஒதுக்கீடுகளையும் டிக்கெட் விற்பனையையும் MOH தற்காலிகமாகக் குறைக்கும்.

VTL-வான்வழி தொடர்பான கூடுதல் விவரங்களை சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) மற்றும் VTL-நிலத்திற்கான கூடுதல் விவரங்களை வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் (MTI) வெளியிடும்.

பற்றி எரிந்த தீ.. 2வது மாடியில் இருந்து குதித்த ஆடவர் – இவரை காப்பாற்ற வெளிநாட்டு ஊழியர் எடுத்த முயற்சிகள் வீண்