இனி அத்துமீறினால் அவ்ளோதான்! – சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிலத்தைப் பாதுகாக்க கடுமையாக்கப்பட்ட தண்டனைகள்!

Photo: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் அரசாங்க நிலத்தில் அத்துமீறி நுழைவோர் அல்லது அனுமதியின்றி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,அவ்வாறு சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் ஏற்படுத்திய சேதத்தை ஈடுசெய்ய அவர்களிடம் இழப்பீடு வசூலிக்க நீதிமன்றம் அவர்களுக்கு உத்தரவிடும்.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அரசு நில பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அதிகபட்ச அபராதம் $5000-லிருந்து $50000 ஆக உயர்ந்துள்ளது.ஆறுமாத சிறைத்தண்டனை மாற்றமின்றி தொடர்ந்து நடப்பில் இருக்கும்.

கடும் தண்டனைகள் உட்பட சிங்கப்பூர் நில ஆணைய அதிகாரிகள் கூடுமான விரைவில் பரந்த அளவிலான அமலாக்க அதிகாரங்களைப் பெறுவார்கள்.

அத்துமீறி செயல்படுவதாக அதிகாரிகள் சந்தேகப்பட்டால் எந்த இடத்திலும் நீதிமன்ற ஆணையின்றி சோதனை நடத்தும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.சட்டங்கள் கடுமையாக்கப்படுவதன் மூலம் அரசு நில ஆக்கிரமிப்புகளைக் குறைக்க இயலும்.