எந்தெந்த நாடுகளுடன் சிங்கப்பூர் அரசு ‘VTL’ ஒப்பந்தம் செய்துள்ளது?- விரிவான தகவல்!

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

சிங்கப்பூர் அரசு கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கென்று சிறப்பு பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த சிறப்பு பயணத் திட்டத்தின் பெயர் Vaccinated Travel Lane- ‘VTL’ ஆகும்.

வெளிநாட்டவரிடம் கொள்ளையடித்த கும்பல் (வீடியோ): 4 வெளிநாட்டவர் உட்பட 6 பேருக்கு கொள்ளையில் தொடர்பு

எந்தெந்த நாடுகளுடன் சிங்கப்பூர் அரசு ‘VTL’ ஒப்பந்தம் செய்துள்ளது? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

ஆஸ்திரேலியா, புரூணை, கம்போடியா, கனடா, டென்மார்க், ஃபிஜி, ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, மலேசியா, மாலத்தீவு, நெதர்லாந்து, தென் கொரியா, ஸ்பெயின், இலங்கை, சுவீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 24 நாடுகளுடன் சிங்கப்பூர் அரசு ‘VTL’ திட்டத்தின் கீழ் இரு மார்க்கத்திலும் பயணம் மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

JUSTIN: அப்பர் புக்கிட் திமா விளையாட்டு மைதானத்தில் 2 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. எனினும், சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

VTL திட்டத்திற்கென்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம், ஸ்கூட், இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தனி விமானங்களைத் தொடர்ந்து இயக்கி வருகின்றன. அத்துடன், VTL அல்லாத விமானங்களும், இந்த நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

JUSTIN: சிங்கப்பூரில் Omicron தொடர்பான முதல் மரணம் பதிவு

அதேபோல், கொரோனா நோய்த்தொற்று விகிதம், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, சில நாடுகளுக்கு சிங்கப்பூர் விமான போக்குவரத்துத்துறை ஆணையத்தின் முறையான வழிகாட்டுதல்களுடன் விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் சிங்கப்பூருக்கு வந்தவுடன் கொரோனா பாரிசோதனை, கட்டாயம் தனிமை உள்ளிட்ட சுகாதாரத்துறை அமைச்சகத்தின் நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

சிங்கப்பூர்- மலேசியா இடையே VTL விமான சேவை மட்டுமின்று, VTL தரைவழி போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடிகளில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?- வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய ‘DBS’ வங்கி!

இதனிடையே, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23- ஆம் தேதி முதல் இம்மாதம் 21- ஆம் தேதி வரை VTL விமான சேவை, பேருந்து சேவைக்கான டிக்கெட் விற்பனையை சிங்கப்பூர் அரசு நிறுத்தியிருந்தது.