உக்ரைனில் இராணுவ நடவடிக்கை குறித்து ‘கடும் கவலை’ தெரிவித்துள்ள சிங்கப்பூர் – MFA

AFP

உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் சிறப்பு இராணுவ நடவடிக்கையை தொடங்கும் ரஷ்யாவின் அறிவிப்பு, தரை மற்றும் வான்வழி தாக்குதல்கள் பற்றிய தகவல்களை அறிந்து கடும் கவலை கொண்டுள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) தெரிவித்துள்ளது.

இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீது தூண்டுதலற்ற படையெடுப்பை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் MFA செய்தித் தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Work pass அனுமதியில் வேலை பெற தந்திரமாக செயல்பட்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை – 19 ஊழியருக்கு நிரந்தர தடை

மேலும், “உக்ரைனின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு ஆகியவை மதிக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என்றும் MFA கூறியது.

அதே போல, “இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி இந்த சர்ச்சைக்கு அமைதியான தீர்வு குறித்தும் MFA வலியுறுத்தி கூறியது.

கட்டுமான கனரக வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வெளிநாட்டு ஊழியர்… பரிதாபமாக உயிரிழப்பு