சிங்கப்பூரில் தலைமை அலுவலகத்தைத் திறக்கும் நிறுவனம்… 400 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கத் திட்டம்!

job Singapore cut
Photo: Singapore Minister S.Iswaran Official Facebook Page

 

அமெரிக்க நாட்டின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மனிதவள நிறுவனம் ‘டீல்’ (Deel). இந்த நிறுவனம், சர்வதேச நிறுவனங்கள் கேட்கும் எண்ணிக்கையிலும், அந்த நிறுவனங்கள் வரையறுக்கும் திறன்மேம்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்து, சம்மந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறது.

இரும்பு கட்டமைப்பு விழுந்து இந்திய ஊழியர் மரணம்: கட்டமைப்பு எடை 560கி… நிறுவனத்துக்கு செக்

‘டீல்’ நிறுவனம் அனுப்பும் ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள், அதற்கான சேவைக் கட்டணங்களை ‘டீல்’ நிறுவனத்துக்கு வழங்குகின்றன.

அந்த வகையில், நிறுவனத்தின் ஆசிய- பசிபிக் தலைமையகத்தின் அலுவலகத்தை சிங்கப்பூரில் திறக்க ‘டீல்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அத்துடன், சிங்கப்பூர் அலுவலகத்தில் சுமார் 400 ஊழியர்களை, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் படிப்படியாக பணியில் அமர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆயுதம் வைத்திருந்த வழக்கில் இந்திய வம்சாவளிக்கு சிறை, பிரம்படி!

தற்போது சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு குறைந்து வரும் சூழலில், ‘டீல்’ நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கை ஊழியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.