ஐந்து நாடுகள் பங்கேற்ற ‘Exercise SUMAN Protector’ ராணுவப் பயிற்சி நிறைவு!

Photo: Ministry Of Defence, Singapore

கடந்த அக்டோபர் மாதம் 10- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமானப் படைத் தளத்தில் சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகள் கூட்டாக இணைந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ராணுவப் பயிற்சிக்கு ‘Exercise SUMAN Protector’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து பார்த்தால் சீனக் கடல் தெரியுமாம்! – அவ்ளோ உச்சியில் கட்டப்படும் வீடு!

அக்டோபர் 18- ஆம் தேதி வரை சுமார் 18 நாட்கள் ராணுவப் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும், இந்த பயிற்சியில் ஐந்து நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் பயிற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

கடந்த அக்டோபர் 12- ஆம் தேதி அன்று மலேசிய ஆயுதப் படைகளின் (Malaysian Armed Forces- ‘MAF’) இராணுவத் தலைவர் ஜெனரல் டான் ஸ்ரீ சாம்ரோஸ் முகமது ஜெயின் (Chief of Army General Tan Sri Zamrose Mohd Zain), கூட்டு ராணுவப் பயிற்சித் தொடக்க விழாவை நடத்திய நிலையில், சிங்கப்பூரின் பாதுகாப்புப் படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மெல்வின் ஓங் (Singapore’s Chief of Defence Force Lieutenant-General (LG) Melvyn Ong) பயிற்சி நிறைவு விழாவை முன்னின்று நடத்தினார்.

சிங்கப்பூர் விடுதலைப் பெற்றதிலிருந்து இதுவரை! – பாலினச் சமத்துவத்தினால் பெண்களின் முன்னேற்றம்

விழாவில் பேசிய சிங்கப்பூர் பாதுகாப்புப் படைத் தலைவர், இந்த ஐந்து நாடுகளிடையே தொழில்முறை இராணுவ தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான மதிப்புமிக்க தளமாக இருக்கும் என்றும், வளர்ந்து வரும் உலகளாவிய பாதுகாப்பு நிலப்பரப்பு மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதற்கும், கட்டியெழுப்புவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நைஜீரியாவில் உள்ள சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்குமாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

இந்த பயிற்சியின் மூலம் ஐந்து நாடுகளிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவை மேலும் வலுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.