சிங்கப்பூரில் முதன்முதலாக “ஹாட் ஏர் பலூன்” சவாரி – சும்மா ஜாலியாக பறக்கலாம்!

Singapore hot air balloon ride
Ballons Du Monde's website

சிங்கப்பூரில் முதன்முதலாக “ஹாட் ஏர் பலூன்” என்னும் உயரத்தில் பறக்கும் பலூன் விரைவில் உங்களை மகிழ்விக்க வர உள்ளது.

தற்போது பொதுமக்கள் அதற்கான முன்பதிவுகளை தங்கள் இணையதளம் மூலம் செய்யலாம் என்று ஹாட் ஏர் பலூன் நிறுவனமான Ballons Du Monde கூறியுள்ளது.

சிங்கப்பூரில் 20 ஆண்டுகள் கடும் உழைப்பு.. கட்டுமான ஊழியராக வந்தவர், இன்று 7 கடைகளுக்கு முதலாளி – பிரம்மிக்க வைக்கும் தமிழரின் வாழ்க்கை

அதில் ஒரு முறை சவாரி செய்ய ஒரு நபருக்கு S$265 செலவாகும், ஒரு குழுவிற்கு அதிகபட்சம் மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இதில் சவாரி செய்ய விரும்பும் அனைத்து நபர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்.

பயணிகளின் எடையைப் பொறுத்து குழுக்கள் மாற்றியமைக்கப்படலாம். மேலும், வானிலை காரணமாகவும் முன்பதிவு மாற்றியமைக்கப்படலாம்.

அங்கு கழிவறை வசதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு விவரங்களை அறிய அதன் இணையதளத்தை பார்வையிடவும்.

சிங்கப்பூரில் வெளி இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை – மகிழ்ச்சியில் நிம்மதி பெருமூச்சு விடும் சில வெளிநாட்டு ஊழியர்கள்!