சிங்கப்பூர் சர்வதேச குழுமத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சிங்கப்பூர் சர்வதேச குழுமத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Photo: Singapore in India

 

தமிழ்நாட்டின் தலைநகர் எழும்பூரில் உள்ள அரசு நல்வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் அக்டோபர் 05- ஆம் தேதி அன்று மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், சிங்கப்பூர் சர்வதேச குழுமமும் (Singapore International Foundation) ஒருங்கிணைந்து மகப்பேறு கால அவசர சிகிச்சை சேவை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

உதவிக்கு யாரும் இல்லாமல் ஆபத்தில் இருந்த மூதாட்டிக்கு ஓடி உதவிய வெளிநாட்டு ஊழியர் – பாராட்டு

இந்த விழாவில், இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டுத் தூதர் எட்கர் பாங் (Edgar Pang), தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், சிங்கப்பூர் சர்வதேச குழுமத்தின் இயக்குநர் விஜயா ராவ் மற்றும், தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஃபோர்க்லிஃப்ட் இயந்திரம் தாக்கி காலை இழந்த ஊழியர்… நிறுவனத்துக்கு S$240,000 அபராதம்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் அவசர கால மகப்பேறு சிகிச்சைகள் உள்ளிட்டவைக் குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிங்கப்பூர் சர்வதேச குழுமம் பயிற்சி அளிக்கவுள்ளது. இதனிடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தான உடனேயே பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.