“சிங்கப்பூர் எல்லைகள் திறந்தாச்சு, இந்தியப் பயணிகளை வரவேற்கிறோம்”

(PHOTO: Dhany Osman/Yahoo News Singapore)

கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட மிகப்பெரிய தாக்கங்களில் ஒன்று சுற்றுலாத் துறையின் பாதிப்பாகும். தொற்று காரணமாக இந்தியா-சிங்கப்பூர் ஆகிய இரு நாட்டு எல்லைகளும் மூடப்பட்டன, விமான சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டன.

தற்போது தொற்று பாதிப்புகள் குறைந்து, எல்லை தாண்டிய பயணம் மீண்டும் கிட்டத்தட்ட வழக்கம் போல செயல்படுகின்றன. இந்நிலையில், இந்தியர்களுக்கு சிங்கப்பூர் கிரீன் சிங்னல் காட்டியுள்ளது.

“ஊழியர்களின் இடத்திற்கு அருகே வேலை”… சிங்கப்பூரை வேலை செய்ய உகந்த நாடாக கொண்டுவர திட்டம்!

“சிங்கப்பூர் எல்லைகள் திறந்தாச்சு, இந்தியப் பயணிகளை நாங்கள் வரவேற்கிறோம்” என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின், இந்திய மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவின் பிராந்திய இயக்குநர் ஜிபி ஸ்ரீதர் கூறியுள்ளார்.

திரு. ஸ்ரீதர் கூறுவது போல், எப்போதும் மிக முக்கியமான சந்தையாக இந்தியா சிங்கப்பூருக்கு இருந்து வருகிறது.

2019ஆம் ஆண்டு கோவிட்க்கு முந்தைய நிலவரப்படி, சுமார் 1.41 மில்லியன் இந்தியர்கள் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சீனா மற்றும் இந்தோனேசியாவைத் தொடர்ந்து, மூன்றாவது பெரிய மூலச் சந்தையாக இந்தியா இருந்து வருகிறது.

மேலும் குறிப்பிடப்பட வேண்டிய செய்தி என்னெவென்றால், இந்தியர்கள் சராசரியாக 6.1 இரவுகள் சிங்கப்பூரில் தங்குகின்றனர், மேலும் அதிக நேரம் ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்களை விட கடும் கட்டுப்பாடுகளை சந்தித்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு இறுதியாக அனுமதி – மகிழ்ச்சி