வேலையிடத்தில் புதிய நடைமுறை.. மீறினால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடை – அக். முதல் அமல்

singapore job foreign workers workplace rules
(Photo: Roslan Rahman/ Getty Image)

வேலையிடத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்த சூழலில், பாதுகாப்பு மேலும் உயத்தப்பட்டது.

இந்நிலையில், உயர்த்தப்பட்ட பாதுகாப்பு மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னர் கட்டுமான துறையில் குற்றப் புள்ளிகள் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது நாம் அறிந்தது தான்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி, டாக்சி மோதி கடும் விபத்து: ஊழியர் உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

அது உற்பத்தி துறைக்கும் விரிவு செய்யப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் அது நடப்புக்கு வரும்.

அதாவது ஒன்றரை வருடத்தில் 25 குற்றப் புள்ளிகள் பெறும் நிறுவனம் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியாது. அதற்கு தற்காலிக தடை விதிக்கப்படும்.

S$5 மில்லியன் அல்லது அதற்கு மேல் மதிப்பிடப்பட்ட கட்டுமான ப்ராஜெக்ட்டுகள் வீடியோ கண்காணிப்பு மூலம் கண்காணிக்கப்படும் முறையை கொண்டிருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்த வீடியோ நடைமுறை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நடப்புக்கு வருகிறது.

இந்திய ஊழியரின் Work permit அட்டை கண்டெடுப்பு: உரியவரிடம் கொண்டு சேர்க்க Share செய்து உதவுங்கள்