தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை: 300 க்கும் மேற்பட்டோர் அதிரடி கைது

Singapore job scam money mules
File Photo : Singapore Police

தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 373 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏழு காவல்துறை தரை பிரிவுகள் மேற்கொண்ட 2 வார அதிரடி சோதனையில் அவர்கள் சிக்கினர்.

பாதாளச் சாக்கடையில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்கள்.. துணி, சிகரெட், பீர் பாட்டில்கள் இருந்ததால் வலுக்கும் சந்தேகம்

அதில் 236 ஆண்களும் 137 பெண்களும் அடங்குவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 1,200 க்கும் அதிகமான மோசடி சம்பவங்களில் தொடர்புடைய அவர்களின் வயது 14 முதல் 80 வரை இருக்கும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

கடன், வேலைவாய்ப்பு, மின்னணு வணிகம் உள்ளிட்ட மோசடிகளும் அதில் அடங்கும்.

பாதிக்கப்பட்டவர்கள் இதன் மூலம் சுமார் S$10 மில்லியன் தொகையை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமான ஊழியரை படுத்த படுக்கையாக போட்ட கோர சம்பவம் – நிறுவனத்தின் இயக்குனர் மீது பாய்ந்த சட்டம்