“சிங்கப்பூரில் வேலை ரெடி… டிக்கெட்டை போடுங்க” ஏமாந்த 100 பேர் – தமிழக இளைஞர்கள் கண்ணீர்

retrenchments-2024-increase-ntuc-measures

“சிங்கப்பூரில் வேலை வாங்கி தாறோம்”… “நீங்கள் பணம் மட்டும் கட்டினால் போதும் லட்சரூவா சம்பளத்தில் வேலை”.. என்ற ஆசை வார்த்தைகளை கேட்டு ஏமாந்தோர் அதிகம்.

வெளிநாட்டு வேலை மீது தமிழர்களுக்கு உள்ள மோகம் எப்போவுமே குறையாது… அதனால் அவர்கள் ஏமாற்றப்படுவதும் ஓயாது.., என்று கூறும் அளவிற்கு கோயம்பத்தூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

“இங்கு பயணம் செய்ய வேண்டாம்”… எச்சரிக்கை செய்யும் சிங்கப்பூர்!

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர் அருகே செயல்பட்டு வந்த ‘அபார்டு டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்’ என்னும் அந்த மோசடி ஏஜென்சி நிறுவனம் சுமார் 100 க்கும் மேற்பட்ட நபர்களை வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளது.

பணம் கொடுத்தவர்கள் உஷாரானதை அடுத்து ஏஜென்சி கும்பல் அலுவலகத்தை மூடிவிட்டு தப்பி ஓடியதாகவும் கூறப்பட்டுள்ளது.

‘வெளிநாட்டில் வேலை வாய்ப்பு’ என்ற போஸ்டர் மூலம் வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து இந்த மோசடி நடந்துள்ளது.

அதில் குறிப்பாக “சிங்கப்பூரில் வேலை ரெடி” என சிலரிடம் லட்ச கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பணம் கட்டிய நபர்களுக்கு சிங்கப்பூரில் இருந்து கால் வந்துள்ளது, அதில் “உங்களுக்கு வேலை ரெடி, நீங்கள் விமான டிக்கெட் புக் செய்யலாம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இறுதியாக ஏஜென்சி பொறுப்புதாரிகளை தொடர்பு கொண்டபோது, போன் சுட்ச் ஆப் என்று வந்துள்ளது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்டோர், வடவள்ளி காவல் நிலையம் முன் திரண்டனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

கார் முன்னே விசித்திரமாக நடந்துகொண்ட பெண்… நம்பர் பிளேட்டை உடைத்து எறிந்து அட்டகாசம்; வீடியோ வைரல்