சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000

hiring-bus-captain-5k
Westpoint Transit Pte Ltd

சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுனர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.

வேலைக்கு சேரும் ஓட்டுனர்களுக்கு மாத தொடக்க ஊதியமே S$5,000 வழங்கப்படும் என அந்நிறுவனம் வேலை விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் 10 முதலாளிகளில் 8 பேர் ஒரு மாத சம்பளத்தை போனஸ்-ஆக வழங்க விருப்பம் – 2024 இல் எதிர்பார்க்கலாம்

அது மட்டுமல்லாமல் வேலைக்கு சேர்ந்ததற்கான சிறப்பு சலுகையாக S$10,000 போனஸும் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

சுமார் 42 வருடமாக இயங்கி வரும் பேருந்து நிறுவனமான Westpoint Transit Pte Ltd இந்த கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் போனஸை அறிவித்துள்ளதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சலுகைகள் ஆட்சேர்ப்பு உத்தியின் ஒரு பகுதியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அந்நிறுவனம் 30 ஓட்டுநர்களை பணியமர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.

அதிகமான இளைஞர்கள் வேலைக்கு சேர இது ஊக்குவிக்கும் என போக்குவரத்து நிறுவனம் நம்புகிறது.

வேலைக்கு விருப்பமுள்ள யார் வேண்டுமானாலும், எந்த நாட்டினர் வேண்டுமென்றாலும் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்:

ஓட்டுநர்கள் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அத்துடன் செல்லுபடியாகும் வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம் (Class 4 driving licence) மற்றும் தொழிற்கல்வி உரிமம் (vocational licence) பெற்றிருக்க வேண்டும்.

வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம் என்பது, 2,500 கிலோவுக்கு மேல் எடையுள்ள கனரக வாகனங்ளை ஓட்டுவதற்கு அந்த உரிமம் கண்டிப்பாக தேவை.

தேர்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மூன்று வருட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட வேண்டும், மேலும் அதோடு S$10,000 உடனடி போனஸையும் விண்ணப்பதாரர்கள் பெறுவார்கள்.

வேலை நேரம்:

வாரத்தில் ஆறு நாட்கள் வேலை இருக்கும், அதிகபட்சம் வாரத்திற்கு 44 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.

வருடத்திற்கு ஏழு நாட்கள் விடுப்பு கொடுக்கப்படும் என சொல்லபப்ட்டுள்ளது.

கடைசி நாள்:

இதற்கான விண்ணப்பங்கள் 2024 ஆண்டு ஜன. 15 ஆம் தேதியோடு முடிவடையும்.

நிறுவனத்தின் LinkedIn மற்றும் myCareersFuture பக்கங்கள்.

சிங்கப்பூரில் மீண்டும் சர்க்யூட் பிரேக்கர் எனும் அதிரடி திட்டமா..? – உண்மை என்ன?