சொந்த நாட்டை விட்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள் – “சிங்கப்பூரில் வேலை” ஏன் இவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது?

singapore Foreigners mom salary
AFP

சிங்கப்பூரில் வேலை செய்வது ஏன் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மலேசியாவில் வேலை தேடுபவர்கள், அதே போல தொற்றுநோய் தொடங்கிய பிறகு சொந்த நாட்டுக்கு திரும்பியவர்கள் உட்பட, சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் அவ்வாறான வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்கின்றன.

பணியில் இருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆடவர் – கர்ப்பிணி மனைவிக்கு ஒரே நாளில் S$70,000க்கு அதிக நிதி திரட்டு

அதிக சம்பளம்

ஏன் இந்த ஈர்ப்பு என்று பார்த்தால், சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் மற்ற நாட்டுடன் ஒப்பிடுகையில் அதிக சம்பளம் மற்றும் சிறந்த சலுகைகளை வழங்குகின்றன.

அதே போல, Exchange rate பண விகிதம் ஊழியர்கள் பலருக்கு சாதகமாக உள்ளதால் ஊழியர்கள் ஈர்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த போக்கு, மலேசிய உள்ளிட்ட நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக நிலவரங்கள் கூறுகின்றன.

மலேசியர்கள் சிங்கப்பூரில் வேலைக்கு எல்லை தாண்டிச் செல்லும் இந்தப் போக்கின் காரணமாக, மலேசிய வேலைச் சந்தை ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று ஓரியண்டல் டெய்லி தெரிவித்துள்ளது.

மலேசியா மற்றுமில்லை, உலகின் பல நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு சிறந்த திறமைவாய்ந்த ஊழியர்கள் வந்த வண்ணம் தான் உள்ளனர்.

செலவுகள் அதிகரிப்பு

கூடுதலாக, அன்றாட செலவுகள் அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவை சிங்கப்பூரில் வேலைக்கு வர ஊழியர்களை தூண்டுகிறது.

அதிகமான சம்பளம் பெரும் ஊழியர்கள் ஒருபுறம் இருந்தாலும், குறைந்த அடிமட்ட சம்பளத்துக்கு வேலை செய்யவும் ஆட்கள் இங்குண்டு.

இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து வந்து இன்னமும் கஷ்டத்தில் இருக்கும் ஊழியர்களின் குடும்பங்கள் பல.

சிங்கப்பூரை வேண்டாம் என்று சொல்லி சொந்த பகுதிகளுக்கு சென்று விவசாயம் பார்க்கும் ஆட்களுக்கும் இருக்கின்றனர்.

இருப்பினும், ஏஜெண்டுகளுக்கு அதிக பணம் கட்டி அந்த கடனை எப்படியாவது அடைத்து விட வேண்டும் என போராடும் கூட்டத்திற்கு மத்தியில் வெளிநாட்டு வாழ்க்கை முடியாத பயணமாக தான் இருக்கும்.

அதிக சம்பளம் பெற என்ன செய்யலாம், போன்ற பல்வேறு பதிவுகள் தொடர்ந்து பெற நம்முடன் இணைப்பில் இருங்கள்.

மனைவியின் சகோதரிக்கு பாலியல் குறுஞ்செய்திகளை அனுப்பி, “நாசம்” செய்த ஆடவர் – சிறை, 6 பிரம்படி விதிப்பு!