சிங்கப்பூரில் வேலை பிடித்தமாதிரி இல்லை… “எங்களுக்கு வேலையே வேண்டாம்” – ஊழியர்கள் ‘நச்’

(Photo: Aespada)

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் ஐந்தில் இருவர் வீட்டில் இருந்தே வேலை செய்ய முடியாவிட்டால், அந்த வேலையே வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 18 முதல் 67 வயதுக்குட்பட்ட 1,000 ஊழியர்கள் கலந்துகொண்டு இதற்கு பதில் அளித்தனர்.

ஜூரோங் ஈஸ்ட்டில் தீ விபத்து… பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு

கணக்கெடுப்பில், அவர்கள் விரும்பும் நேரத்தில் வேலை செய்ய முடியாவிட்டால், எங்களுக்கு அந்த வேலையே வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் அவர்களில் 80 சதவீதம் பேர் நெகிழ்வான வேலை நேரம் தங்களுக்கு முக்கியம் என்று கூறியுள்ளனர்.

ஆட்சேர்ப்பு நிறுவனமான Randstad-ன் கணக்கெடுப்பில் இருந்து இந்த தரவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டன.

தொலைதூர வேலை

அந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 77 சதவீதம் பேர் தொலைதூர வேலையின் முக்கியத்துவத்தை மதிப்பதாகக் கூறினர்.

வீட்டில் இருந்து வேலை

42 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்யும் விருப்பம் இல்லை என்றால் வேலை வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

வேலையில் மகிழ்ச்சி

வேலையில் மகிழ்ச்சி முக்கியம் என்றும், மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதைவிட வேலை இல்லாமல் இருந்துவிடலாம் என்று பல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ச்சர்ட் சாலையில் அடிதடி சண்டை – கலவரம் செய்ததாக 3 பேர் மீது குற்றச்சாட்டு