சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முதலாளிகளுக்கு S$5.5 பில்லியன் உதவி..!

Singapore JSS employers Payouts
Photo Credit : Today

சிங்கப்பூரில் வேலை உதவித் திட்டத்தின் (JSS) மூலம் சுமார் S$5.5 பில்லியனுக்கும் அதிகமான தொகை அக்டோபர் 29 முதல் முதலாளிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1.9 மில்லியன் உள்ளூர் ஊழியர்களின் சம்பளத்தை வழங்க 140,000க்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் (MOF) மற்றும் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : உயிரிழந்த கணவர் நினைவாக வைத்திருந்த செல்போன் திருட்டு; 80 கி.மீ பயணம் செய்து மீட்ட நடத்துனர்..!

மேலும், இது ஜூலை மாதத்தில் வழங்கப்பட்ட கடைசி தொகையை விட 1.5 பில்லியன் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த JSS என்பது ஒரு சம்பள மானியத் திட்டமாகும், இதனை பிப்ரவரி மாத பட்ஜெட்டில் துணைப் பிரதமர் Heng Swee Keat முதன்முதலில் அறிவித்தார்.

COVID-19 தொற்றுநோயால் வணிகங்கள் பாதிக்கப்படுவதால் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், ஊதியம் பெறவும் இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விமான போக்குவரத்து, சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் உள்ள முதலாளிகளுக்கு 75 சதவீத ஆதரவு இந்த திட்டம் மூலம் கிடைக்கும்.

உணவு சேவைகள், சில்லறை விற்பனை, கலை மற்றும் பொழுதுபோக்கு, நிலப் போக்குவரத்து, கடல் மற்றும் கடல்வழிகளில் உள்ளவர்களுக்கு 50 சதவீத ஆதரவு கிடைக்கும்.

அதிரடித்திட்டம் (Circuit breaker) முடிவடைந்த பிறகும் வேலைகளை தொடங்க அனுமதிக்கப்படாத நிறுவனங்களுக்கு, அந்தக் காலக்கட்டத்திற்கு மட்டும் 75 சதவீத ஆதரவு வழங்கப்படும்.

மேலும், மற்ற அனைத்து துறைகளிலும் உள்ள முதலாளிகளுக்கு 25 சதவீத ஆதரவு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று திரு ஹெங் அவர்கள் ஒரு முகநூல் பதிவில், அனைத்து முதலாளிகளும் இந்த கடினமான காலகட்டத்தில் தங்கள் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதியை மூட உத்தரவு – உணவு விற்பனை நிலையங்களுக்கு அபராதம்..!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…