மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகம்.!

Singapore Jurong Fishery Port
Pic: MINISTRY OF SUSTAINABILITY AND THE ENVIRONMENT

சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகம் இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

அங்கு பணியாற்றும் ஊழியர்கள், கடைக்காரர்கள் உள்ளிட்ட 75% மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துறைமுகம் மீண்டும் திறக்கப்பட்டபோது, சுமார் மூன்றில் ஒரு பகுதி கடைகள் மட்டுமே திறந்திருந்தது, குறைந்த ஊழியர்களே பணிக்கு வந்ததால் துறைமுகத்தில் செயல்பாடுகள் இயல்புநிலைக்கு திரும்பாமல் இருந்து வந்தது.

இந்த 8 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தனிமை உத்தரவை அவர்கள் வசிக்கும் இடங்களில் நிறைவேற்றலாம்!

இந்நிலையில், தற்போது ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத்தில் வாடகைதாரர்கள் அதிகமானோர் கடைகளுக்குத் திரும்பியுள்ளனர் பத்தில், 8-க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் திறந்துள்ளது.

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத்தில் கடல் உணவுகள் இறக்குமதியின் அளவு துறைமுகம் மூடப்படுவதற்கு முன்பு இருந்த அதே அளவுக்கு திரும்பியுள்ளது.

துறைமுகத்தில் தற்போது கூடுதலான நுழைவாயில்களும், வெளிவாயில்களும் அமைக்கப்பட்டுள்ளது, வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் லாரிகள் முன்கூட்டியே வருவதற்கு வர்த்தகங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொருள்களை தூக்கி நகர்த்த அதிகமான கனரக வாகனங்கள் ஈடுபடுத்தப்படுவதால், சமூக இடைவெளி கட்டுப்பாடுகளுக்கு இடையே கடல் உணவுகளை சுலபமாக இடம் மாற்ற அவை வகைசெய்கின்றன.

தெம்பனிஸ் காபி ஷாப்பில் தீடீரென தீ விபத்து!