சிங்கப்பூரில், பிரபல பாடகர் “ஜஸ்டின் பீபர்” கலந்துகொள்ளும் கச்சேரி நிகழ்ச்சி!

பிரபல பாடகர் “ஜஸ்டின் பீபர்” (Justin Bieber) சிங்கப்பூர் வருகிறார். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 25ஆம் தேதி நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

அதற்கான டிக்கெட்டுகள் S$108 முதல் S$348 வரை கட்டணத்தில் கிடைக்கும், மேலும் கூடுதலாக S$4 முன்பதிவுக் கட்டணம் இருக்கும்.

வெளிநாட்டு ஊழியர்களின் உரிமைக்காக அயராது பாடுபட்ட “பிரிட்ஜெட் டான்” காலமானார்

டிக்கெட்டுகள் வரும் ஏப்ரல் 21 அன்று காலை 10 மணிக்கு www.ticketmaster.sg என்ற இணையதளத்திலும் விற்பனைக்கு வரும்.

மேலும், 3158-8588 என்ற தொலைபேசி மூலமாகவும், அனைத்து சிங்போஸ்ட் விற்பனை நிலையங்களிலும் டிக்கெட்டுகளை பெறலாம்.

சிறப்பு VIP தொகுப்புகளும் கிடைக்கும். மேலும் விவரங்களை அவரின் இணையதளமான www.justinbiebermusic.com இல் அறியலாம்.

டாக்ஸி பயணிகளுக்கு தமிழ் ஊழியர் செய்த உதவி… “மற்றவர்களுக்கு உதவுவதில் தமிழனை அடிச்சிக்க முடியாது” – குவியும் பாராட்டு